திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பாக மருத்துவம் பார்க்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறும் பொதுமக்கள், 24 மணி நேரமும் அவசர சிகிச்சை வழங்கப்படுவதாக கூறுகின்றனர். முத்துலட்சுமி ரெட்டி திட்டம், அம்மா பெட்டகம் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வரும் அரசுக்கு கர்ப்பிணி பெண்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
Discussion about this post