திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில், தனியார் பள்ளிகளின் பேருந்துகள் நல்ல முறையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளில் ஆய்வு பணி நடைபெற்றது. தற்போது நத்தம் மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகளின் 465 பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பேருந்தில் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா எனவும், வாகன எஞ்சின் நல்ல முறையில் உள்ளனவா என்றும் சரிபார்க்கப்பட்டது.
Discussion about this post