சேலம் அருகே சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, குடிநீர்த் தொட்டியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம், மணியக்காரனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து முதலமைச்சரின் உத்தரவின்படி, சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. குடிநீர் வழங்கும் திட்டத்தை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார். குடிநீர் பிரச்னையை தீர்த்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post