கரூர் மாவட்டத்தில் புகளுரை புதிய தாலுகா அறிவித்தமைக்கு தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக புகளுரை புதிய வட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு தென்னிலை, க.பரமத்தி மற்றும் புகளுர் ஆகிய 3 குறு வட்டங்களுடன் 27 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி புதிய வருவாய் வட்டமாக புகளுரை அறிவித்துள்ளது. இதற்கு முதலமைச்சருக்கும், மக்களவை துணை சபநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதனால் தங்களுக்கு தேவையான அரசு சார்ந்த ஆவணங்கள் பெற ஏதுவாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
Discussion about this post