உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான ஒட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து திமுக தொடுத்த வழக்கினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்து ஜூலை இரண்டாம் வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும் தேர்தல் ஆணைய வட்டராங்கள் தெரிவித்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது.
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வேண்டும். அதன்படி விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான இடஒதுக்கீட்டினை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற ஆறு வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்ததெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிலாம் என்பது தொடர்பாக உத்தரவையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான இடஒதுக்கீட்டினை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற ஆறு வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்ததெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிலாம் என்பது தொடர்பாக உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள லிங்க்-ல் செல்லவும்:
https://drive.google.com/file/d/1-S7COWrCA3YBqXo2KIwHXGyv-0wRd2Wr/view?usp=sharing
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவிற்கு 82 வார்டுகளும், பொது பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள லிங்க்-ல் செல்லவும்:
https://drive.google.com/file/d/1HaaUvBGPMMuxrq_glEc_58CLWNOuC1HJ/view?usp=sharing
Discussion about this post