அருப்புக்கோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கண்மாய் பகுதியில் முதுமக்கள் தாழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. முதுமக்கள் தாழி மீது உள்ள குறியீட்டை பார்க்கையில் அவை பெருங்கற்கால நாகரீகத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கிருஷ்ணம்மாள் தெரிவித்தார். இப்பகுதியில் பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகள் தென்படுவதால் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Discussion about this post