தமிழகம் முழுவதும் 50 உணவு தானிய கிடங்குகளை கட்ட 6 கோடியே 29 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் மற்றும் தானிய வகைகளை சேமித்து வைத்து நியாய விலைக்கடைகளுக்கும், பேரிடர் காலத்தின் போதும் தமிழக அரசு விநியோகித்து வருகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 50 இடங்களில் உணவு தானியக் கிடங்குகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது தானியக் கிடங்குகள் கட்ட 6 கோடியே 29 லட்சம் கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Discussion about this post