சிறப்பான முறையில் கையாண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று, அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் விதமாக பட்டிமன்றம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய அதிமுக கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஜாக்டோ ஜியோ போராட்டத்தை சாமர்த்தியமாக கையாண்டு முடிவுக்கு கொண்டு வந்ததற்கான பெருமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேரும் என்றார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
Discussion about this post