தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பணிக்கு வரும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் பீலா ராஜேஸ் கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு பீலா ராஜேஷ் எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அரசு உறுதியளித்த பின்னும், மருத்துவர்கள் 5 பேர் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் 20 விழுக்காடு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் பணிக்கு வருவோருக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இதனால் பணிக்கு வரும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
Discussion about this post