ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை அடுத்த நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தவர் டாக்டர் சுதாகர். தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று கூறி கடந்த மாதம் அவர் குற்றம்சாட்டினார். இதற்காக அவரை கடந்த மாதம் எட்டாம் தேதி ஆந்திர மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. பணியிடை நீக்கத்திற்கு பின் அவர் குறித்து ஒரு தகவலும் இல்லை. இந்நிலையில், நரசிபட்டினம் அருகே சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில், டாக்டர் சுதாகர்அரை நிர்வாண கோலத்தில் லாரி ஒன்றின் முன் கிடந்தார். அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக போலீசார் அவரின் கைகளை பின்புறமாக கட்டி அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் ஆந்திராவில் எழுந்துள்ளது.
Discussion about this post