அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற ஈரோட்டை சேர்ந்த 23 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேவைப்படும் பட்சத்தில், தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தலாம் எனவும், பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கலந்து ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் கூறினார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பெள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Discussion about this post