நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சியில் அரசு கட்டடங்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
எலச்சிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி, நியாயவிலை கட்டடம், பொதுக்கழிப்பிடம், ஊராட்சி மன்றக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மண்டகபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல் உள்ளிட்ட 27 பணிகளுக்கு, 3 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ள பணிகளைத் பூமிபூஜையுடன் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Discussion about this post