அரசு பள்ளிகளில் 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டையில் வேலவன் வித்யாலயா துவக்கப்பள்ளி மற்றும் பெரியசாமி நிதியுதவி உயர்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை துவக்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார்.
Discussion about this post