தமிழகத்தில் நிபா தாக்குதல் இல்லை என்பதை உறுதிபடுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுகாதார துறை, கால்நடை துறை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்ய தமிழக எல்லையில் தனிகுழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும் தனிவார்டுகள் அமைத்து, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், காய்ச்சல் குறித்து தெரிவிக்க 104, 24334811, 24350496 உள்பட தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post