புடலங்காய் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புடலங்காயை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். அரை ஏக்கரில் புடலங்காய் பயிரிட 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது புடலங்காய் விளைச்சல் அதிகரிப்பால் கடந்த 2 மாதங்களுக்கு முன் 250 ரூபாய்க்கு விற்பனையான 13 கிலோ மூட்டை தற்போது 100 ரூபாய் அளவிற்கு விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Discussion about this post