இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர், கோத்தபய ராஜபக்ச போட்டியிட முடிவு செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோத்தபய ராஜபக்ச, நீண்ட காலமாக யோசித்து அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறினார். இதற்காக அமெரிக்க குடியுரிமையையும் விட்டுக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றும், அந்த சம்பவம் தன்னை மிகவும் கவலையடைய செய்துள்ளதாக கோத்தபய ராஜபக்ச கூறினார்.
Discussion about this post