இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச 13 லட்சத்து 60 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்தார். இதையடுத்து கோத்தபய ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி ட்விட்டர் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.அத்துடன் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்ச, அதிபராக பதவியேற்று முதல் முறையாக 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Discussion about this post