தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையில் பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் பள்ளி வளாகத்தில், பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் பயிற்சி மையம் நடத்தி வந்தார்.
இவரிடம் தடகள பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 29ம் தேதி கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post