கூகுள் நிறுவனமானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், அவ்வப்போது போட்டிகளை நடத்துவது வழக்கம். இந்த தேர்வுகள் கூகுளின் ஆன்லைன் தேர்வாக நடக்கும். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம்.
தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தை சார்ந்த மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு கூகுள் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினி. மேட்டுப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் பயின்று வருகிறார். தர்ஷினிக்கு எப்போதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் அதிகம். அவளின் அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துக் கொண்ட ஆசிரியர் சரவணன், கடந்த டிசம்பர் மாதம் கூகுள் நடத்திய அறிவியல் திறனாய்வு போட்டியில் கலந்துக் கொள்ள ஊக்குவித்திருக்கிறார்.
அதன் விளைவாக தர்ஷினி ஏ.டி.எம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வருவதைப் போல, காயின்கள் தரும் காயின் வெண்டிங் மிஷினைக் கண்டுப்பிடித்துள்ளார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார். அதற்கு கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் “உங்களின் யோசனையை உலகிற்கு தெரிவித்ததற்கு நன்றி” என தர்ஷினியைப் பாராட்டியிருக்கிறது.
Discussion about this post