2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த ஓராண்டாகவே இந்தியாவில் மக்களிடையே பணப்புழக்கமானது குறைந்து ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏதுவாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்தன. மேலும் வாடிக்கையாளர்களை கவர இத்தகைய செயலிகளை உபயோகித்தால் ஏராளமான சலுகைகளையும் அறிவித்தன. இதனால் ஏராளமான மக்களும் ஆன்லைன் முறைக்கு மாறினர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை UPI எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் கூகுள் பே நிறுவனம் மற்ற நிறுவனங்களை பின் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. கூகுள் பே நிறுவனத்தில் கடந்த காலங்களில் மட்டும் தோராயமாக ரூ.49,700 கோடி அளவிற்கு பணபரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து PhonePe நிறுவனம் நடப்பாண்டில் ரூ.42,610 கோடி அளவில் ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பணம் திருடப்படுவதும், மோசடி நடப்பதும் பெருமளவில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post