கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை, கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
கடந்த 2016ஆன் ஆண்டு, சீனாவில் டிக் டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியைப் பயன்படுத்தி 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 2வது முறையாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆஜரான சீன நிறுவனத்தின் வழக்கறிஞர், காணொலிகள் முழுக்க தணிக்கைக்கு உட்படுத்தி பதிவேற்றப்படும் என்றும், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினால் மட்டுமே, மக்கள் அவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும் என தடை நீக்கக்கோரி உத்தரவிட்டனர். இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கை ஒத்திவைத்தனர். இதனிடையே ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதையடுத்து கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை இந்தியாவில் பயன்படுத்த முடியாதபடி ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது.