ஜம்முவில் இருந்து ஈரோடு வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 17 ஆம் தேதி ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி செல்லும், ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு ரயில் நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இந்த ரயிலில் ஈரோட்டில் இறக்கவேண்டிய பார்சல்கள் உடைக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் பற்றுச்சீட்டு கோவையில் இருப்பதால் திருடப்பட்ட பொருட்கள் குறித்த விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. காலி அட்டைப் பெட்டிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்பெட்டி பூட்டு உடைக்கப்படாமல் பார்சல் பிரிக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு இருப்பதால், வரும் வழியில் ஏதாவது ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களுடன் சேர்ந்து கொள்ளையர்கள் இந்த திருட்டை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Discussion about this post