20 ஆண்டுகளுக்கு மேல் தனக்கென்று அடையாளம் வைத்து வந்து யாஹூ க்ரூப்ஸ் அதன் சேவையை தற்போது நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
யாஹூ என்கிற பெயர் தெரியாத நபர் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகவும் பிரபலமானது. 21ஆம் நூற்றாண்டின் முதல் மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்த வந்த இந்த நிறுவனம். 2001-ம் ஆண்டு யாஹூ உருவான காலத்திலிருந்து இன்று வரை இணைய உலகில் பல்வேறு மாற்றங்கள் மாற்றி வந்தது. அதன் பிறகு, யாஹூ மெயில் முறைகளில் பல அப்டேட்களை தரத் தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தும் வந்தது. இருந்தபோதிலும் புதிய வசதிகள் மற்றும் புதிய அப்டேட்கள் அதில் வழங்கப்படவில்லை.
1998 ஆம் ஆண்டில் கூகிள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் யாஹூவை அணுகினர். அதன் பேஜ் தரவரிசையை
( இந்திய மதிப்பில் ரூ. 7,09,45,000) $ 1 மில்லியனுக்கும் குறைவாக வாங்கியது. கூகுள் நிறுவனர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்டில் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினர். ஆனால் பயனர்கள் தங்கள் சொந்த மேடையில் அதிக நேரத்தை செலவிட விரும்பியதால், தொழிலை மேம்படுத்த விரும்பவில்லை. அப்போது உடன்பாடு ஏற்படதால், யாஹூ நிறுவனம் கூகுளை வாங்க மறுத்துவிட்டது.
அதன் பிறகு கூகுள் நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியால், பல புதிய மென்பொருள் சேவைகளையும் நிறுவனம் நிறுவியது. தற்போது கூகுள் இணையத் தேடலுடன் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்ட்கள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப், கூகுள் டிரைவ், கூகுள் டியோ போன்ற பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் ஏறுமுகமாக இருக்கிறது.
ஆனால், யாஹூ இறங்குமுகமாக வாடிக்கையாளர்கள் இழந்து வந்து கொண்டு இருந்தது. இந்த நேரத்தில், யாஹூ தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், கோப்புகள்,என அத்தனை தரவுகளையும் வடிக்கையாளர்கள் அனைவரும் வருகிற டிசம்பர் 14ஆம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவையை நிறுத்திக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
இந்த முடிவு, யாஹூ நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையிலேயேஇந்த முடிவு யாஹூ நிறுவனத்தின் கொள்கை அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post