திருச்சி விமான நிலையம் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து இரண்டவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்கூட், மலிண்டோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள் 130 பேரிடம் சோதனை நடத்தினர். இதில், 30 கிலோ தங்கம், சிகரெட் பாக்கெட்டுகள், எலக்ட்ரானிக் சாதனங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 28 பேரிடம் இரண்டாம் நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணை வளையத்திற்குள் விமான நிலைய அதிகாரிகள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post