சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நான்கு நாட்கள் தொடர் சரிவுக்கு பிறகு 2-வது நாளாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 365 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 111 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 888 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 700 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து 76 ஆயிரத்து 700 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
Discussion about this post