சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலை 29 ஆயிரத்து 208 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 112 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 22 கேரட் தங்கம், நேற்று ஒரு கிராம் 3 ஆயிரத்து 651 ரூபாயில் இருந்து 14 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 29 ஆயிரத்து 208 ரூபாயிலிருந்து 112 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 24 கேரட் தங்கம் கிராமிற்கு 3 ஆயிரத்து 833 ரூபாயிலிருந்து 14 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 847 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் 30 ஆயிரத்து 664 ரூபாயிலிருந்து 112 ரூபாய் 30 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 49,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post