சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று 96 ரூபாய் அதிரித்துள்ளது. 24 காரட் சொக்கத்தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 789 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 312 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 609 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 872 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேப்போல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 47 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் அதிகரித்து 47 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
Discussion about this post