சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ஆயிரத்து 196 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதனடிப்படையில் சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 25 ஆயிரத்து 568 ரூபாயிக்கும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 196 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு 43 ரூபாய் 60 காசுகளுக்கும், கிலோ 43 ஆயிரத்து 600 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post