சென்னையில் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 815 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை 10 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 658 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் இருந்து மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் 49 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 49 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post