எதிலும் புதுமை காணும் மலையாளிகள், புதிய முறையில் தங்கம் கடத்தி, புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கியுள்ள சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. தங்கம் கடத்தலுக்கு பெயர் போன கேரளாவுக்கு, வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் உடமைகளை புலனாய்வுத் துறையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 302 கிராம் தங்கத்தை, பேஸ்ட்டாக மாற்றி, பேண்ட் துணியின் இருபக்கத்திலும் பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 14 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post