சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 31, 184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4 ,091 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 32 , 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 3, 898 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 31,184 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, 49 ரூபாய் 90 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் குறைந்து 49,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post