தங்கத்தின் விலை சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ரூ.1500 உயர்ந்து, ரூ.26 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் பாதிப்பு உள்ளூர் சந்தையிலும் எதிரொலிக்கிறது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம், சவரன் ஒன்று 26 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் ரூ.344 உயர்ந்து சவரன் ஒன்று ரூபாய் 26 ஆயிரத்து 464-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3 ஆயிரத்து 308 ஆக உள்ளது. இதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 100 உயர்ந்து, ரூ.41 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post