கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக “கோ பேக் ஸ்டாலின்” ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
குறிப்பாக, சென்னையில் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு போதிய சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள், படுக்கை கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்திருந்து மருத்துவமனை வாசலிலேயே உயிரிழக்கும் சோகமும் அரங்கேறி வருகிறது.
இதற்கு தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “கோ பேக் ஸ்டாலின்” ஹேஸ்டேகை டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறியதால், நாள்தோறும் ஏறாளமானோர் செத்து மடியும் நிலையில், ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, என்ன பயன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பலரும் எதிர்ப்பை பதிவு செய்ததால், “கோ பேக் ஸ்டாலின்” ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்தது.
Discussion about this post