மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கோவா முதல்வரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். பானாஜியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மனோகர் பாரிக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், பாரிக்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Discussion about this post