அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகைக் கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணத்தை, 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், அரசு ஊழியர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post