சூடாகும் பூமி! உலகம் வெப்பமயமாதலால் ஏற்படப் போகும் ஆபத்து!

புவி வெப்பமயமாதல்:

புவி வெப்பமடைதல் என்பது  நிச்சியமாக தற்பொது  பூமி எதிர்கொள்ளும் சுற்றுசூழல் சவாலாகும்.  இந்த நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளவது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். புவி வெப்பமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டு இருக்கும் சீரான வெப்பநிலை உயர்வுதான் புவிவெப்பமடைதல் ஆகும்.

மேலும் பூமி வெப்பமடைந்து வருவதால், சூறாவளி, நோய்கள் மற்றும் வெப்ப அலைகளின் காயங்கள், வறட்சி, புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலுள்ள சராசரி காற்றின் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் விட சற்று குறைவாக உயர்ந்துள்ளதது. புவிவெப்படைவதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.

உலக வெப்ப நிலை மாற்றங்கள்:

இன்றைய வெப்பநிலை 150-ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 0.74 டிகிரி சென்டிகிரேட் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே புவி வெப்பமாதல் என்பது  நிதர்சனமானது என்பதை  பருவநிலை மாற்றம் உணர்த்திக் கொண்டே உள்ளது.  வரலாறு காணா வகையில் வெப்பநிலை அதிகரிப்பதும், பருவமழை  பொழிவு குறைந்து இருப்பதும் புவி வெப்பமடைகிறது என்பதை நம்மால் உணர முடியும்.  இதுபோலவே  நம் உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தை  அடைந்து உள்ளது. சுற்றுசூழல் வல்லுனர்கள் உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால், கடந்த ஜூலை 3-ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு அதிகரித்து இருந்தது. இந்த நாளை உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவாகி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்த நிலையில் அப்பொது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.  ஆனால் இப்போது அதை எல்லாம் ஓரம்கட்டிய வகையில் கடந்த ஜூலை 3-ஆம்  தேதி  17.01 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது.  தொடர்ந்து ஜூலை 4 மற்றும் 5, 6-ஆம் தேதிகளில் 17.23 டிகிரி செல்சியஸ் என சராசரி வெப்பநிலை பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே, இந்த வெப்பநிலையை குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் (institute for climate change) கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில் உண்மையில் இது நமக்கும் நம் சுற்றுசூழலுக்கும், நம்முடைய வாழ்வாதாரத்திற்கும் ஏற்புடையது அல்ல என்றும், இதே நிலைமை தொடர்ந்து வந்தால் மிகவும் மோசமான மற்றும்  அதிக மரணங்கள் ஏற்படும் நிலமை வந்து விடும் என்றும் கூறினார்.

 

Exit mobile version