உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் வாங்கும் கடனின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதாக சர்வதேச நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் 770 கோடி மக்கள் தொகையில், ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் மொத்த கடன் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கடன் அதிகரிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது என்றும் மொத்த கடனில் 60 சதவிதம் இந்த இரண்டு நாடுகளால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.