‘காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்’ இந்த பாடலை நிச்சயமாக காதலிப்பவர்களும் சரி,காதலை சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திருப்பவர்களும் சரி, இப்பாடலை கேட்டு நிச்சயமாக உருகியிருப்பார்கள். கல்லும் கூட கரையும் இந்த பாடலை கேட்டால். காதல் என்று கூறினாலே நாம் மனதில் ஒரு சில்லென காத்து,தலையை சுத்தி ஏஞ்சல்ஸ்,அப்பறம் அங்க அங்க பட்டாம்பூச்சியும் பறக்கும்னு தான் படத்துல பாத்திருப்போம்.ஆனால் இப்படியெல்லாம் நடக்கவில்லை என்றாலும்,காதல் என்பது வாழ்வில் வந்துவிட்டாலே ஒரு தனி உலகில் தான் வாழ்வோம்.
உண்மையில் காதல் மிகவும் அழகானது,ஆழமானது,ரசிக்ககூடியது.இத்தகைய அழகான ஒன்றை அனுபவிக்கவேண்டும் அல்லவா? அதற்கு தான் காதலர் தினம் இருக்கிறதே…காதலர் தினமானது பிப்ரவரி 14 மட்டும் கொண்டாடினால் பத்தாது..அதற்கு முன்னால் வரும் 7 நாட்களுமே காதலர் தினம் தான்.இன்று பிப்ரவரி 7 rose day .ரொம்ப யோசிக்காதிங்க… நீங்க லவ் பண்றவங்களுக்கு ஒரு ரோஸ் வாங்கி கொடுங்க,ஒரு ரோஸ் இல்ல, ரோஸ் மழையிலேயே நனையவைங்க. அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. காதலன் தன் காதலிக்கு வாங்கி கொடுக்கணும்னு இல்ல, அன்பு என்பது அனைவருக்கும் சொந்தமானது.ஒரு நிமிடம் உங்களின் கண்களை மூடி யோசியுங்கள் நீங்க இந்த நொடி சந்தோஷமா இருக்க யாரு காரணமோ,அவங்களுக்கு ரோஸ் வாங்கி கொடுங்க.அவங்க படுகின்ற சந்தோஷமானது நிச்சயமாக உங்க காதலி படுகின்ற சந்தோஷத்த விட ஒரு படி மேல தான் இருக்கும்.
என்ன தான் நான் ‘ மொரட்டு சிங்கிள்’ என வீம்பாக சொல்லி கொண்டு திரிந்தாலும்.காதலர் தினம் நெருங்கும் போது..ச்சா..நம்மலும் லவ் பண்ணிருக்கலாமோ என்று நிச்சயமாக நினைப்பார்கள்.சீக்கிரமே உங்க மனசுக்கு பிடிச்சவங்கள தேடி கண்டுபிடிங்க, கண்டுபிடிக்கிறது மட்டுமில்ல கடைசி வரையும் அவங்க கைய பிடிக்கணும் அது தான் உண்மையான காதல்.