ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் கூலி தொழிலாளியாக பணியாற்றிவரும் நிலையில் அவரது மனைவி மல்லிகாவிற்கு பிரசவலி ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது மல்லிகாவிற்கு பெண் குழந்ததை பிறந்ததையடுத்து குழந்தை எந்த ஒரு அசைவும் இன்றி இருந்ததால் செவிலியர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் மல்லிகாவிற்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டபோது ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மயக்கமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மல்லிகாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Discussion about this post