திருவண்ணாமலையில் உள்ள பர்வதமலைப் பகுதியில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்த அரசுக்குப் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலையில் மார்கழி மாதத்தையொட்டி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பிரசன்ன நாயகி சமேத கரைகண்டேசுவரர் கோவிலில் இருந்து 4 ஆயிரத்து 560 அடி உயரமுள்ள பருவதமலை உச்சியிலுள்ள மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு மார்கழி மாதத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்த கிரிவலத்தில் பங்கேற்றனர். பக்தர்களுக்குச் சாலை வசதி, கழிப்பறை, ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ வாகனம் எனப் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிமுக சார்பில் மலையைச் சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துகொடுத்த தமிழக அரசுக்குப் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post