எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தேசிய அளவில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான கிரிஷி கர்மான் விருது தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் சார்பில், கிரிஷி கர்மான் விருதை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது, வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.