திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்து குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஆட்சியர் பரிசாக வழங்கினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை கொண்டு வந்த பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க அதிகாரிகள் மேற்கொண்ட புது யுக்தி பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post