ரவுடி என்கவுண்டர் வழக்கில், காவல் துறையை கண்டித்து டிக்டாக் செயலியில் கானா பாடல் வெளியிட்ட பாடகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த ஆனந்த், கடந்த வருடம் ஜூலை 3 ஆம் தேதி காவல் துறையினரை வெட்டியைதை தொடர்ந்து என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்தாண்டு மைலாப்பூரில் ரவுடி ஆனந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது உறவினர்கள் மற்றும் ஆதவாளர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர். சமாதி அருகே நின்று, சிலர் என்கவுண்டர் செய்த காவல் துறையினரை கண்டித்து டிக்டாக் செயலியில் கானா பாடல் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். விசாரனை மேற்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர்.
Discussion about this post