பழமை வாய்ந்த தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் பட்டுப்புடவை பாரம்பரியமாக சோழ மன்னர்கள் காலத்திலிருந்து கலை நயத்துடன் அழகுற கைத்தறியால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு திருபுவனம் பட்டுப் புடவைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின் திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்களை தவிர வேறு யாராவது நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ போலியாக விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார்.