திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சரக்கு வாகனத்தில் பதுக்கி எடுத்து வரப்பட்ட டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.
தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை நடத்தியதில், சுமார் 2,600 டெட்டனேட்டர்கள் மற்றும் 3000 ஜெலட்டின் குச்சிகள் மறைந்து எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த வாகனம் கண்டவரெட்டி கிராமத்தை சேர்ந்த முரளி என்பவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதையடுத்து முரளியைக் கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post