ஜிடி நாயுடு பற்றிய ஆவணப்படம் தயாரித்தன் மூலம் விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர்.திரைப்படக் கல்லூரியில் படித்ததுடன், 2 ஆண்டுகள் உதவி கேமரா மேனாகவும் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் கிராபிக் டிசைனராகப் பயிற்சி பெற்ற பிறகு, மத்திய திரைப்பட பிரிவில் 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜிடி நாயுடு குறித்த ஆவணப்படத்தை 12 நாட்களில் ஒளிப்பதிவு செய்து, மூன்று மாதங்களுக்குள் பட வேலைகளை முடித்தார். ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை குறித்த ரஞ்சித்குமாரின் ஆவணப் படம் BASED SCIENCE AND TECHONOLOGY பிரிவில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்றுள்ளது.
Discussion about this post