கோவையில் தி.மு.க.-வினர் இடையே ஏற்பட்ட மோதலில், ”போடு என்றால் போட்டுவிடுவார்கள்” என்று பேசியிருக்கும் அலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.-வினர் இடையே அவ்வப்போது உட்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் தி.மு.க. பிரமுகர் உதயகுமார் என்பவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பழிவாங்கும் விதமாக குறிச்சியின் ஒவ்வொரு பகுதியிலும், கோஷ்டிகளை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உதயகுமாரிடம், குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் என்ற தி.மு.க. தொண்டர், அலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, மற்றொரு தி.மு.க. பிரமுகரை குறித்து பேசும்போது, “போடு என்றால் போட்டுவிடுவார்கள்” என்றும், பொய் புகார்கள் அளித்தது குறித்தும் பிரகாஷ் கூறியுள்ளார். இந்த ஆடியோ வெளியானதால், தி.மு.க.-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.