வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழில் அதிபரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து 3 லட்சம் ரூபாய் பறித்த இரண்டு பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் நூருல்லாபேட்டையை சேர்ந்த தொழிலதிபர் அப்துல ரப் ஆரிப் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய தாயை கவனித்துக் கொள்ள செவிலியரை தேடி வந்த நிலையில், ஆபிதா என்பவர் அவரை தொடர்பு கொண்டு பெங்களூரில் செவிலியர் ஒருவர் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பி பெங்களூருக்கு கடந்த 16-ம் தேதி அப்துல் சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி அவரை வீட்டிற்குள் வைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை காட்டியும் கத்தியை காட்டியும் அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறித்துள்ளனர்.
இதையடுத்து அதிலிருந்த 3 லட்சம் ரூபாயை எடுத்து நகைகள் வாங்கிய அவர்கள், இரவு 10 மணிக்கு அப்துலை ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்தில் கொண்டு சென்றனர். அப்போது, அவர் கூச்சலிட்டதையடுத்து, ஆட்டோவில் இருந்த நபரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்துள்ளனர்.
அவனிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, வாணியம்பாடியை சேர்ந்த ஆபிதா, தாரா என்ற இரண்டு பெண்கள் உள்பட 10 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து நகைகள், ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post