சென்னையில் மதுபான கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு அருகே சின்மயா நகர் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள அரசு மதுபான கடையில், சதீஷ் என்பவர் சப்ளையராக பணிப்புரிந்து வருகிறார். வியாபாரம் முடிந்து கடையில் சதீஷ் உறங்கி கொண்டி இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல், அவரை தாக்கி 17 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றது.
கொள்ளை கும்பலில் ஒருவரை மட்டும் சதீஷ் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் பிடிப்பட்டவர் சாலிகிராமத்தை சேர்ந்த முகமது ரஷீத் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தப்பியோடிய வெற்றிவேல், அருள் மற்றும் சிறுவன் முகேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Discussion about this post