எளிதில் கரையும் விநாயகர் சிலைகள், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
சென்னை, எர்ணாவூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னனி சார்பில், விநாயகர் சிலை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, பாண்டிச்சேரியில் இருந்து வந்துள்ள, சிலை வடிவமைப்பு மற்றும் வண்ணம் தீட்டும் குழுவினர் இரவு பகலாக சிலை செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கிழங்கு மாவு மற்றும் காகித கூழால் தயாராகும் விநாயகர் சிலைகள், எடை குறைவாகவும், எளிதில் கரையும் தன்மையுடனும் உள்ளதால் இந்த சிலைகளுக்கு, இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.